வரி விதிப்பை குறைப்போம்... இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்... ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

 
மோடி ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் நியாயமான மற்றும் வித்தியாசமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளதை முன்னிட்டு, அதற்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை குறைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப்

ஓவல் அலுவலகத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட டிரம்ப், “இந்தியாவுடன் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். அவர்கள் தற்போது எங்களை நேசிக்கவில்லை, ஆனால் விரைவில் மீண்டும் நேசிப்பார்கள். நியாயமான ஒப்பந்தம் ஒன்று விரைவில் கையெழுத்தாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

முன்னதாக, இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், “அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில முக்கிய பிரச்சினைகள் இருப்பதால், ஒப்பந்தம் சிறிது காலம் எடுக்கும்,” என கூறியிருந்தார். டிரம்பின் சமீபத்திய அறிக்கை, அந்த பேச்சுவார்த்தை முடிவை நோக்கி நகர்கிறது என்பதற்கான சிக்னலாகக் கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!