இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி... அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

 
நியூசிலாந்து கிரிக்கெட்

நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக உலகக்கோப்பை அரையிறுதியில் பங்கு பெறுவதற்கான நியூசிலாந்து அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

SL vs NZ

இதில், தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். தனஞ்செய டி சில்வா 19 ரன்னும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மதுஷனகா 19 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இஇலங்கை அணி 46.4 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்களுக்கு எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

SL vs NZ

தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள்  குவித்தார். தொடக்க விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 42  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில்  நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web