அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த பச்சிளம் குழந்தை பலி!

 
எலி

 மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ்  அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்  சிகிச்சைக்காக 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அந்த குழந்தைகளை எலிகள் கடித்து விட்டதாக பரபரப்பு  குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து  மருத்துவமனையின் சூப்பிரெண்டான டாக்டர் அசோக் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தை ஒன்றின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதியையும் எலிகள் கடித்துவிட்டதாக கூறினார்.  அவை இரண்டும் புதிதாக பிறந்த குழந்தைகள் .  வற்றில் ஒரு குழந்தை கார்கோன் மாவட்டத்தில் யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டு கிடந்துள்ளது.

 எலி

அதனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவங்கள் குறித்து  விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டி 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 எலி


இந்த உயிரிழப்பு குறித்து மருத்துவரான அசோக் யாதவ் “ குழந்தை உயிரிழப்புக்கு எலி கடித்தது காரணம் இல்லை. 1.2 கிலோ எடை கொண்ட, பிறந்து 3 நாளே ஆன அந்த பெண் குழந்தை கடுமையான இருதய பாதிப்புடன் பிறந்திருந்தது. அதனுடைய பெற்றோர் அதனை கைவிட்டு விட்டு சென்றுவிட்டனர். 
இச்சம்பவத்தில், பணியாளர்கள் 2 பேரை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. அத்துடன் பல்வேறு அதிகாரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து   நீதிமன்ற விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?