தாலி மஞ்சள் வாசம் கூட போகலை... திருமணமான 2 வாரத்தில் புதுமணப் பெண் தற்கொலை!

 
செல்வி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் புதிதாக திருமணமாகி 2 வாரங்கள் கூட முழுதாக ஆகாத நிலையில், புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகமுதலியார் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை. இவரது மகள் செல்வி (21). இந்நிலையில் செல்விக்கும், கழுகுமலை தியாகராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இருவீட்டு பெரியவர்கள் பார்த்து, நிச்சயித்து திருமணம் செய்து வைத்தனர். 

கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி  1ம் தேதி கழுகுமலையில் இருந்த செல்வியை, தந்தை பாடித்துரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தான் நலமாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் அன்றைய தினமே மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மகளின் மாமியார் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார். 

ஆம்புலன்ஸ்

இந்த தகவலைக் கேட்டு பதறியடித்தப்படி செல்வியின் பெற்றோர் சென்றனர். சடலமாக கிடந்த தங்கள் மகளைக் கண்டு அழுது கதறினர். இந்நிலையில், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பாண்டித்துரை அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதம் கூட முழுசாக முடியாத நிலையில், செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web