5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு... குடை எடுத்திட்டு போங்க!

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!