திரையுலகில் அடுத்த திருமணம்... காதலனை அறிமுகப்படுத்தி ‘குக் வித் கோமாளி’ பிரபலம் நடிகை அம்மு அபிராமி நெகிழ்ச்சி!

 
அம்மு அபிராமி

திரையுலகில் அடுத்தடுத்து காதல் திருமணங்கள் நடைபெற்று வருகிறது. முரட்டு சிங்கிளாக இத்தனை வருடங்களைக் கடந்து வந்த பிரேம்ஜி அமரன் காதல் திருமணம் செய்துள்ள நிலையில், நடிகர் அர்ஜூன் மகள், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி திருமணமும் நடந்து முடிந்துள்ளது. 
 

இந்நிலையில், நடிகை அம்மு அபிராமி தனது காதலரை அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய காதலை உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும், திரைத்துறையினரும் நடிகை அம்மு அபிராமிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். குக் வித் கோமாளி இயக்குநர் பார்த்திபனைக் காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

அம்மு அபிராமி

‘ராட்சசன்’ படத்தில் துறுதுறு ஸ்கூல் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் ‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். 

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை மணி இயக்கி வருகிறார். அம்மு அபிராமி கைவசம் ‘நிறங்கள் மூன்று’, ‘ஜகதாம்பாள்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web