அடுத்த அதிர்ச்சி... பாரதிராஜா குடும்பத்தில் சோகம்.. தேனி விரைகிறார் பாரதிராஜா!

 
பாரதிராஜா

கலைத்துறையினருக்கு இது கஷ்டகாலம் போல. தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வந்த நகைச்சுவை கலைஞர்கள் அடுத்தடுத்து  மரணமடைவது ரசிகர்களை மட்டுமல்லாமல், திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் நாள் வரையில் நன்றாக பேசி, துடிப்புடன் இருந்த நடிகர் விவேக் மரண செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர்  மயில்சாமியின் சிவராத்திரி பூஜையில் எல்லாம் கலந்து கொண்ட பின்னர், அதிகாலையில் மரணமடைந்தார். 

பாரதிராஜா

இவர்களின் மரணம் குறித்து கண் கலங்கி, பல வருட நண்பர்கள்... இவர்கள் இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று கண்ணீர் வடித்து இரங்கல் செய்தி சொன்ன நடிகரும், இயக்குநருமான மனோபாலா நேற்று  உடல்நலம் குன்றிய நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.

தனது உதவியாளர் என்பதையும் தாண்டி, மனோபாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகம். இது குறித்து துக்கத்துடன் நேற்று பாரதிராஜா பேசியிருந்த நிலையில், இன்று அதிகாலை இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரி பாரதியின் கணவர் துரைராஜ் தேனியில் காலமானார்.

துரைராஜ்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரி பாரதியின் கணவர் உடல்நல குறைவால் இன்று அதிகாலை 3 மணிக்கு தேனி அல்லி நகரத்தில் காலமானார். சகோதரியின் கணவர் காலமான செய்தி கேட்டு, தேனி விரைந்துள்ளார் பாரதிராஜா. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web