நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தொழிலாளி பலி; உறவினர்கள் மறியல்!

 
அன்பழகன்

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில், நேற்று இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, பெல்ட்டில் சிக்கி சொசைட்டி தொழிலாளி அன்பழகன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் வாயிலை முற்றுகையிட்டு, அவரது உடலை எடுத்து செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்பழகன்

நெய்வேலி அருகே உள்ள ஊமங்கலம், புது இளவரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் அன்பழகன்(51). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் பிரிவில் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று ஜூலை 8ம் தேதி காலை வழக்கம்போல அன்பழகன் இரண்டாவது நிலக்கரி சுரங்க கன்வேயர் பெல்ட் பிரிவுக்கு சென்று பணியாற்றி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கன்வேர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தார்.

அன்பழகன்

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சுரங்கத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வெளியில் எடுத்து செல்லப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த அவரது  உறவினர்கள் என்எல்சி இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆம்புலன்ஸை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு உடலை எடுத்துச் செல்லவிடாமல் மறியல் செய்தனர். உயிரிழந்த அன்பழகன் உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர், என்எல்சி உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web