25 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை... தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு!

 
என்ஏஐ

தமிழகம்  முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு சம்பந்தமாக  இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மதமாற்றம் தொடர்பான மோதலில்  2019ல் பாமக பிரமுக ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
என்ஐஏ

ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான 6 பேரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ராமலிங்கம் கொலை வழக்கு சம்பந்தமாக  என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  

என்ஐஏ

கும்பகோணம் அருகே திருப்புவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web