இந்தியாவில் 13 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நபர் கைது!

 
நைஜீரியா சட்டவிரோதமாக தங்கி இருந்த

கடந்த 13 ஆண்டுகளாக விசா காலம் முடிந்தும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரிய நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

மேற்கு ஆப்பிரிக்க நாட்டான நைஜீரியாவின் இமோ மாகாணத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி (43), 2012 ஆம் ஆண்டு தொழில்வருகை விசாவுடன் மும்பைக்கு வந்தார். விசா காலம் முடிந்தபின்னரும் அவர் தாய்நாட்டிற்கு திரும்பாமல் மாயமானார். மும்பையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அடிக்கடித் தங்கிய அவர், அடையாளம் மறைத்து வாழ்ந்ததுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

ஐதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சிறப்பு நடவடிக்கையில், ஆசிப் நகரில் தங்கி இருந்த ஜான் கென்னடி கைது செய்யப்பட்டார். ஆவண சான்றுகள் மற்றும் விசா விவரங்களை ஆய்வு செய்ததில் அவர் 13 ஆண்டுகளாக சட்டவிரோத தங்கலில் இருந்தது தெரியவந்தது.

இளம் நடிகர் கைது

விசாரணை முடிவில், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, விமானம் மூலம் நைஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிநாட்டு நபர்கள் சட்டவிரோத தங்கல் மற்றும் போதை வியாபார செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் கவனம் அதிகரித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!