இரவு துபாய் பயணம்... அதிகாலையில் அரசு பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
இரவு துபாய்க்கு விமானத்தில் செல்ல இருந்த நிலையில், அதிகாலை சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி, இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கச்சராயன்பட்டியைச் சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் அழகு (35). துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும், ஏ.கோவில்பட்டியை சேர்ந்த பவின் என்பவருக்கும் திருமணமாகி ஆதீஸ்வரன் (7) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் துபாயில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு அழகு திரும்பினார். விடுமுறை முடிந்து நேற்று துபாய் செல்ல தயாராகி வந்தார்.

இந்நிலையில் இவர் தனது மாமனார் கிராமமான கோவில்பட்டியில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினார். மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து கொட்டாம்பட்டி போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
