நைட்டி, லுங்கி அணிந்து வெளியில் நடமாட தடை!! பொதுமக்கள் கடும் அவதி!!

 
நைட்டி லுங்கி

பாரம்பரிய ஆடைகள் மறைந்து மேற்கத்திய ஆதிக்கம் உடைகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பெண்கள் முன்னால் நைட்டி அணிந்திருந்தனர். இப்போதெல்லாம் கடைகளுக்கு செல்ல டூவீலர்கள், கார்களில் கூட நைட்டியை போட்டுக்கொண்டே  ஊர்சுற்ற கிளம்பி விட்டனர். முன்பெல்லாம் வீட்டு பெரியவர்கள் இது குறித்து கண்டித்து அறிவுறுத்தல்களை வழங்குவர். இப்போது தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட நிலையில் அவரவர் இஷ்டம் தான்.

நைட்டி லுங்கி
 உத்தர பிரதேச மாநிலத்தில்  நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்   வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டியை அணிந்து வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.  உத்தர பிரதேசத்தில் தலைநகர்  டெல்லிக்கு அருகே அமைந்திருக்கு நொய்டாவில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  மக்கள் தொகை இப்பகுதியில் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.


அங்கு ஹிம்சாகர் எனும் அடுக்குமாடி கட்டடத்தில்   ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் எப்போதும் குடியிருப்பு வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளுக்கு தாங்கள் விரும்பிய உடைகளை அணிந்தே வந்தனர்.   ஜூன் 10ம் தேதி அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்கம்  அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசில் ''குடியிருப்பு வளாகத்திற்குள் உள்ள பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது  லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது.   நடத்தை, உடையில் சிறப்பு கவனம் தேவை. இதனை ஆட்சேபிக்கும் வகையில் யாரும் நடக்க கூடாதது. இதனால் வீட்டுக்குள் பயன்படுத்த வேண்டிய லுங்கி, நைட்டி இவைகளை வீதிகளில் அணிந்து திரியக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நைட்டி லுங்கி
இந்த நோட்டீசால் பெரும் சர்ச்சை உருவானது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கூட இந்த முடிவின் பின்னணி பற்றி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கல்ரா விளக்கம் அளித்தார்.  ''இது ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால், அது ஆண்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசவுகரியமாக இருக்கும்  . இருப்பினும் கூட குடியிருப்பில் வசிப்போர் இந்த நோட்டீசுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து இந்த முடிவானது 4 நாட்களுக்கு பிறகு நேற்று திரும்ப பெறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web