ட்ரம்பிற்கு நிக்கி ஹேலி எச்சரிக்கை... இந்தியா போன்ற நட்பு நாடுடான உறவைக் கெடுக்க வேண்டாம்!
இந்தியாவின் மீது அடுத்த 24 மணி நேரத்தில் இன்னும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரும் குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நிக்கி ஹேலி, இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட வரி குறித்து மிக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் பேணப்பட்டு வருவதாக நிக்கி ஹேலி கூறியுள்ளார். இவர் நீண்ட காலமாக இருநாட்டு உறவுகளை ஆதரித்து வருகிறார். சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மை அவசியம் என கூறியுள்ளார்.

அந்த வகையில், தற்பொழுது சீனா போன்ற எதிரி நாட்டிற்கு சலுகைகளை வழங்க வேண்டாம். அதே நேரத்தில் இந்தியா போன்ற நட்பு நாடுடனான உறவைக் கெடுக்க வேண்டாம் என டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் ட்ரம்ப் நிர்வாகம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக நிக்கி ஹேலி குற்றம் சாட்டினார்.
சீனாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா 90 நாள் வரி விலக்கு அளித்ததாகவும், அதே நேரத்தில் இந்தியா மீது கடுமையான கட்டுப்பாடுகள் காட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹேலியின் இந்த எதிர்ப்பு, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல், உலக வர்த்தகத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் தூண்டி, உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை, ஜவுளி துறைகள் இந்த வரியால் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
