செப்டம்பர் 14ம் தேதி நிர்மலா சீதாராமன் சென்னை வருகை!
செப்டம்பர் 14ம் தேதி ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை வரும் நிதியமைச்சர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். செங்கோட்டையன் அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும்படி குரல் கொடுத்த நிலையில் செங்கோட்டையனின் பொறுப்புகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பறித்துவிட்டார். செங்கோட்டையன் முயற்சிக்கு, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் முழு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்த பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை சமரசப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ., சார்பாக நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
