இன்று பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம்!!

இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் ,மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வர். இவர்கள் அனைவருமே நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர்களே. கர்நாடக தேர்தலில் தோல்வி, பாராளுமன்ற கட்டிடத் திறப்பு உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் குறித்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இக்கூட்டத்தில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் சுகாதாரம் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் , உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், டெல்லி ,தெலுங்கானா, மேற்கு வங்கம் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் மற்ற மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ளனர். 2020ல் கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!