இந்த திட்டத்த வாபஸ் வாங்குங்க.. நிதிஷ்குமார் குடைச்சல்... திணறும் பாஜக!

 
சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார்

 நடத்தி முடிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்  கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 3 வது முறையாக மோடி நாளை மறுநாள் ஜூன் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். இதில்  16 இடங்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமார்  12 இடங்களையும் வைத்துக் கொண்டு பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களின் ஆதரவு இருந்தால் தான் பாஜக ஆட்சியில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலைஇல்   2 கட்சிகளும் நிபந்தனை விதிக்க தொடங்கியுள்ளார்கள். அதன்படி மக்களவை  தேர்தல் முடிவுகளில் அக்னி வீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜேடியு தரப்பு நம்புகிறது.

நிதிஷ்குமார்
இத்திட்டத்தின் படி 4 வருடத்திற்கு இளைஞர்கள் பாதுகாப்பு படையில் பணிபுரிவார்கள். அதன் பிறகு 25 சதவீதம் அக்னி வீரர்கள் மட்டுமே அங்கே தொடர்கள் மீதமுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தான் அக்னிவீர் திட்டம்.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூட ஆட்சிக்கு வந்தால் அக்கினி வீர்  திட்டத்தை நீக்குவோம் என வாக்குறுதி கொடுத்து இருந்தது.  பாஜக ஆட்சி அமைக்க ஜேடியு ஆதரவு முக்கியம் என்ற நிலையில்  பாஜகவுக்கு செக் வைக்கும் வகையில் முதலில்  அக்னி வீர் திட்டத்தை நீக்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web