மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் இனி வயது வரம்பு நீக்கம்!

 
மருத்துவக் காப்பீடு


மூத்த குடிமக்களுக்கு இது குட் நியூஸ். மருத்துவக் காப்பீடு எடுப்பதற்காக இது வரையில் நடைமுறையில் இருந்து வந்த வயது வரம்பை நீக்கம் செய்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி எந்த வயதினரும் மருத்துவ காப்பீடு செய்து கொள்ள முடியும்.இதுநாள் வரையில்  65வயது தான் மருத்துவ காப்பீடு பெறுவதற்கான உச்சப்பட்ட வயதாக நடைமுறையில் இருந்து வந்தது. 65 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவ காப்பீடு செய்து கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் வயதானவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

மருத்துவக் காப்பீடு

மூத்த குடிமக்களுக்கு இது பெரும் சிரமமாக இருந்து வந்தது.இந்நிலையில், இந்த உச்சபட்ட வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்  நீக்கியுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துமாறு மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களை ஐஆர்டிஏஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதவிர மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைவரும் பயனடையும் வகையிலான காப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web