நோ பேனர், நோ கட் அவுட்!! விஜய் அதிரடி உத்தரவு!!

 
விஜய்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு  ஊக்கத்தொகை வழங்கப்படும் என  விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்   விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நாளை  ஜூன் 17ம் தேதி சனிக்கிழமை  இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக  பொதுவெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்க கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

விஜய் மாணவிகள்
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் என 5,000 பேர்  கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பங்கேற்பாளர்கள் அனைவருக்கும்  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5000  பேருக்கும் காலை ,பிற்பகல் உணவாக   பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பிச்சுட்டாய்ங்க...! வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

இந்நிலையில் தான் பொது வெளியில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார்.  இந்நிகழ்வை பெரிதாக எடுத்துக்காட்டும் வகையில் விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். தற்போது விஜய்யின் உத்தரவு குறித்து,  விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி  அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web