ஒகேனக்கல் காவிரியாற்றில் 7வது நாளாக குளிக்க தடை...நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் 7வது நாளாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல்களை இயக்கவும் தடை இயக்கப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது.
நேற்று ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நீர்வரத்து உயர்ந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!