அதிமுகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை... அண்ணாமலை பேட்டி!

 
அண்ணாமலை
 இன்று டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

“2019ல் அதிமுக ஆளும் கட்சி. பாஜக 303 சீட்டுகள் வாங்கியது. ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது இது தான். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணி சொல்கிறார். வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.
பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு.. இல்லை என்றால் ஒரு பேச்சு.
அதிமுக கோவையில் அனைத்து எம்.எல் ஏ இருந்தும் ஏன் வெற்றி பெறவில்லை? கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள். பாஜகவிற்கு காலம் வரும். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து  தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம்.
திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள் . அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அண்ணாமலை வாக்குவாதம்.
படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். இணை அமைச்சர் பதவி ஏற்பதாக தகவல் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம் என்றார்.  

எஸ்.வி சேகர் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, எஸ்.வி.சேகர் யார் என்று எனக்கு தெரியாது என்றார். 
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026ல் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றவர், எஸ்.பி.வேலுமணி கூறியுள்ள நிலையில், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்றதற்கு, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும் என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web