வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

 
வணிக சிலிண்டர்
இன்று ஆகஸ்ட் 1ம் தேதி சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்ட நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளிடையே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அதே சமயம் காலையிலேயே வணிகர்களை அதிர்ச்சியளிக்கும் விதமாக நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டு இன்று முதல் ரூ.1,817க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சிலிண்டர்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் பெரியளவில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், இன்று காலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் ரூ.1,817க்கு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. 

சிலிண்டர்

இதற்கு முன்பாக தேர்தலையொட்டி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து 4 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்படுவது வணிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி