சூப்பர்... வீட்டுக்கடன் , தனிநபர் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை... ரிசர்வ் வங்கி!

 
வீட்டுக்கடன்

 ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்காக உற்சாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்  பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. அத்துடன்  பழைய நிலையே நீடிக்கும். என தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என  பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.  அதே நேரத்தில்  தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதனால், நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது” என தெரிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web