12 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.. தினமும் சண்டை.. விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பிரங்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சங்கருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில், சங்கரின் மனைவி, சங்கரிடம் தகராறு செய்து, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த சங்கர், சொந்த கிராமமான பிரங்கம்பட்டு ரயில் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் முன் விழுந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!