ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை கிடையாது...!!

 
ரேஷன்

தமிழகம் முழுவதும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் தான் ரேசன் கடைகளுக்கு விடுமுறை. சில கிளைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில்     தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்க வசதியாக வார விடுமுறை நாளான இன்று நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.  அதே போல் நாளைமறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை  நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக  கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, பட்டாசு ஷாப்பிங்கை பொதுமக்கள் தொடங்கிவிட்டனர்.  தீபாவளி பண்டிகை தினத்தில் இனிப்புகள், பலகாரங்கள் செய்வதற்காக  மளிகை பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.இந்நிலையில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லையென உணவுத்துறை அறிவித்துள்ளது.

ரேஷன் சர்க்கரை

இது  குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில்  அனைத்து நாட்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்   தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி,சர்க்கரை, பருப்பு என ரேஷன் கடையில் உள்ள பொருட்களை மானிய விலையில் வாங்க காத்திருப்பர்.

ரேஷன்

இதன் அடிப்படையில்  அனைத்து ரேஷன் கடைகளிலும்  இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.   பல ரேசன் கடைகள் முதல் 2 வாரம் வெள்ளிக்கிழமை தான்  விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை  திறந்து இருக்கும். பகுதி நேர கடைகள் மற்றும் சில கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அந்த  கடைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5ம் தேதி   திறந்து  வைக்க வேண்டும்” என   உணவுத்துறை    உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web