ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு, மீறினால் கடும் எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 23ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தொடர் விடுமுறையாக அக்டோபர் 20 முதல் அக்டோபர் 25 வரை பயணிகள் தேவைகளை பொறுத்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
எனவே அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு DO,CO,CL,EL,SL ஆகிய விடுப்புகள் வழங்க இயலாது.
மேலும் அன்றைய நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு ABSENT REPORT அனுப்பி சட்டப் பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் . மேற்கண்ட நாட்களில் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!