கோவையில் அதிர்ச்சி... அலட்சியத்தால் கண் முன்னே பறிபோன உயிர்!

 
சந்திரன்

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் முரளி, சந்திரன்(50), ஹரிதாஸ் ஆகிய மூவர் உள்பட பலரும் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில், வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு பணியாளர்கள் வண்ணம் பூசும் பணிக்கு வந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு உயரமான கட்டடம் என்பதால், மரப்பலகையில் கயிறு கட்டி அதில் தொங்கியவாறு பெயிண்ட் அடிக்கும் பணியை துவங்கி உள்ளனர். 

சந்திரன்

அதன்படி, பலகையில் சந்திரன் என்பவர் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற முரளி, ஹரிதாஸ் ஆகிய இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார். நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின், தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனால் சந்திரன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஒரு மணி நேரம் போராடியுள்ளார். குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள்  சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர்  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சந்திரன்

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்,டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை உடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web