பேருந்துகளில் யார் புகைப்படமும் கூடாது... என் போட்டோவைப் பார்த்தாலும் கிழிச்சுடுங்க... அமைச்சர் உத்தரவு!

 
பேருந்துகளில்  யார்  புகைப்படமும் கூடாது... என் போட்டோவைப் பார்த்தாலும் கிழிச்சுடுங்க... அமைச்சர்  உத்தரவு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில அமைச்சர் கணேஷ்குமார், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் அனைத்து பேருந்து முனையங்களும் கணினிமயமாக்கப்படும் என தெரிவித்தார். 

இது குறித்து எம்எல்ஏக்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, கிட்டத்தட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் நிதியில் இருந்து கணினிகளை ஒதுக்கியுள்ளனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் வழங்கும் கம்ப்யூட்டர் அடிப்படையில் அந்த டெப்போக்களில் கணினிமயமாக்கல் கொண்டு வரலாம் என்றார்.

மேலும் ஊழியர்களிடம், அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார். அலுவலகத்தை விட்டு உணவு அருந்தவோ அல்லது வேறு வகையிலோ கிளம்பிச் செல்லும் போது மின்விசிறிகள் மற்றும் விளக்குகளை அணைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். 

இது குறித்து முகநூலிலும் பதிவிட்டுள்ள அமைச்சர், அதில், டெப்போக்களில் தேவையற்ற சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் தங்கள் சுவரொட்டிகள் மற்றும் முன்மொழிவுகளை அந்தந்த டிப்போக்களில் சரியாகக் காட்சிப்படுத்துவதற்கான வசதிகளை வாரியங்கள் வழங்க வேண்டும். மேலும் எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம். அமைச்சராக இருக்கும் என் படத்தைப் பார்த்தாலும் கிழித்து எறிந்து விடுங்கள் என்று அன்புடன் சொல்கிறேன். அதில் எனக்கு எந்த புகாரும் இல்லை. போராட்டங்களை சாலையில் கொண்டு செல்லாதீர்கள். பேருந்து நிலையத்திற்குள் யாருடைய போஸ்டரையும் ஒட்ட வேண்டாம். பேருந்து நிலையத்திலோ அல்லது பேருந்துக்கு வெளியிலோ யாராவது போஸ்டர் ஒட்டினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போஸ்டர் ஒட்டிய அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்வோம்'' என்று கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web