’பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை’.. திருமாவளவன் பேச்சு!

 
திருமாவளவன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூரில் உள்ள செம்பியம் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன்

ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பின்னர், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனம். தமிழகத்தில் முக்கியமான தலைவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். குறிப்பாக பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை. குறைந்தபட்சம் உளவுத்துறையாவது உஷாராக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது உண்மைதான்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்களை நேசித்தவர், அம்பேத்கரின் தத்துவத்தையும் அரசியல் சட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியை  விசாரிக்க வேண்டும். சாதாரண தலித் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றார் திருமாவளவன்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web