சண்டேயில் நோ சோஷியல் மீடியா, நோ செல்போன்.. இனி இதை பண்ணுங்க.. இளம் தொழிலதிபர் வேண்டுகோள்!

இன்றைய நவீன வாழ்க்கையில் செல்போன், லேப்டாப், டேப்லெட், ப்ளூடூத் போன்ற டிஜிட்டல் சாதனங்களால் நமது ஒவ்வொரு நிமிடமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இவை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு இந்த சாதனங்களுடன் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்நிலையில் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்காமல் டிஜிட்டல் சாதனங்களோடு நேரத்தை கடத்துகிறோம். நமது வாழ்க்கை இப்படியே முடிவதற்கு ஒரு தீர்வை பரிந்துரைத்துள்ளார் முதலீட்டு நிறுவனமான Zerodha வின் நிகில் காமத். இது குறித்து 'எக்ஸ்' இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் பலரையும் புதுவிதமாக சிந்திக்க வைத்துள்ளது.
Attention = time, time, the commodity that defines all other commodities. Crazy to think we control so little and others so much.
— Nikhil Kamath (@nikhilkamathcio) May 28, 2024
I'm as manipulated by all this as the next guy/girl. Let's take some control back, last Sunday of every month no devices? Let's experience the… pic.twitter.com/JKrdxdcd6l
நிகில் காமத் X தளத்தில் எழுதியுள்ளார்... அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “கவனம் = நேரம்... நேரம் என்பது அனைத்து சொத்துகளையும் உருவாக்கும் சரக்கு (சொத்து). இதில் எங்களிடம் கட்டுப்பாடு மிக மிகக் குறைவு. எல்லா ஆண்களையும் பெண்களையும் போலவே நானும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டேன். இனிமேலாவது இதை கொஞ்சம் கட்டுப்படுத்த முயற்சிப்போம். பேசாமல், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை எந்த டிஜிட்டல் சாதனத்தையும் பயன்படுத்தாமல் இருந்தால் என்ன? இதைவிட நேரில் சந்தித்து பேசினால் என்ன? நாமெல்லாம் இதைச் செய்தால், நானும் இதை நிச்சயம் செய்ய முடியும்!'' என்று பதிவிட்டுள்ளார் நிகில் காமத்.
நிகிலின் இந்த பதிவை பார்த்து பலரும் 'அட இது நல்ல ஐடியா' என கமெண்ட் போட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையை யாரிடமும் செல்போனில் பேசாமல், வாட்ஸ்அப்பில் யாரிடமிருந்தும் மெசேஜ் அனுப்பாமல்/பெறாமல், இன்ஸ்டாகிராமில் புதிய தகவல் எதுவும் போடாமல், கம்ப்யூட்டரில் எந்த மெயிலையும் பார்க்காமல் கழிக்க முடியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!