40 நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்ய விசா தேவையில்ல!
இலங்கை அரசாங்கம், சுற்றுலா வருகையை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி , 40 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கான விசா கட்டணத்தை விலக்கு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் 2025 ஜூலை 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளிலிருந்து வருகிற பயணிகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு நம்பகமான மற்றும் மலிவான சுற்றுலா சாத்தியங்களை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி விசா கட்டண விலக்கு வழங்கப்பட்ட நாடுகள்:
1. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்
2. ஜெர்மனி கூட்டாட்சி குடியரசு
3. நெதர்லாந்து இராச்சியம்
4. பெல்ஜியம் இராச்சியம்
5. ஸ்பெயின் இராச்சியம்
6. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த்
7. போலந்து குடியரசு
8. கஜகஸ்தான் குடியரசு
9. சவுதி அரேபியா இராச்சியம்
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
11. நேபாள கூட்டாட்சி ஜனநாயக குடியரசு
12. சீன மக்கள் குடியரசு
13. இந்திய குடியரசு
14. இந்தோனேசியா குடியரசு

15. ரஷ்ய கூட்டமைப்பு
16. தாய்லாந்து இராச்சியம்
17. மலாயா கூட்டமைப்பு
18. ஜப்பான்
19. பிரான்ஸ் குடியரசு
20. அமெரிக்கா
21. கனடா
22. செக் குடியரசு (செக்கியா)
23. இத்தாலி குடியரசு
24. சுவிஸ் கூட்டமைப்பு (சுவிட்சர்லாந்து)
25. ஆஸ்திரியா குடியரசு
26. இஸ்ரேல் குடியரசு
27. பெலாரஸ் குடியரசு
28. ஈரான் இஸ்லாமிய குடியரசு
29. ஸ்வீடன் இராச்சியம்
30. பின்லாந்து குடியரசு
31. டென்மார்க் இராச்சியம்
32. குடியரசு கொரியா
33. கத்தார் மாநிலம்
34. ஓமன் சுல்தானகம்
35. பஹ்ரைன் இராச்சியம்
36. நியூசிலாந்து
37. குவைத் மாநிலம்
38. நோர்வே இராச்சியம்
39. துருக்கிய குடியரசு
40. பாகிஸ்தான்
இந்த 40 நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை அரசு 30 நாட்கள் வரை விசா கட்டண விலக்கை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
