காற்றில் பறந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு.. ஜாலியாக சுற்றுலா சென்ற உறுப்பினர்கள்.. தப்பித்த மேயர் பதவி!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். 51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வுக்கு 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என 35 உறுப்பினர்களும் உள்ளனர். மேயர் மீதான அதிருப்தியின் விளைவாக மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 22 அதிருப்தி உறுப்பினர்களின் புகைப்படங்கள் மற்றும் 10 ஆதரவாளர்களின் மொத்தம் 33 உறுப்பினர்களின் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பணிக்காக மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் காலை 10 மணி முதல் காத்திருந்தார். ஆனால் அதிருப்தி உறுப்பினர்கள் உட்பட யாரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதனால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானமும் ரத்து செய்யப்பட்டதாக கமிஷனர் செந்தில் முருகன் அறிவித்தார். இதற்கிடையில் மேயருக்கு எதிராக வந்த கவுன்சிலர்கள் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக கூறி திடீரென காணாமல் போனது ஏன்? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வியை கேட்கிறார்கள்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!