வடகொரியாவில் Hamburger, Icecream சொற்களுக்குத் தடை... கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு..!
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் . வடகொரியா மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் கலாச்சார தாக்கத்தை குறைக்கும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆங்கில மொழியில் பரவலாக பயன்படுத்தப்படும் சில சொற்களுக்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அரசின் தற்போதைய உத்தரவின்படி, ஹேம்பர்கர் ஐஸ்கிரீம் மற்றும் கரோக்கி போன்ற சொற்களை பயன்படுத்தக்கூடாது. இவைகளுக்கு பதில் வடகொரிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களிலும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கு வடகொரிய இளைஞர்கள் மத்தியில் பரவி வருவதை தடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏற்கனவே தனது தனித்துவமான கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய தடை, மேற்கத்திய நாடுகளின் மொழி மற்றும் வாழ்க்கை முறை வடகொரிய சமூகத்தில் ஊடுருவுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
