வடகிழக்கு பருவமழை 111% வரை அதிகரிக்கலாம்... வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  நடப்பாண்டில் 111 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அத்துடன்  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்


இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று  அடுத்த 3 மணி நேரத்திற்கு  9 மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மஞ்சள்

அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கேரளா, தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், ராயலசீமா பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்  அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும்  கூறியுள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web