திருச்செந்தூர் கோயில் கட்டுமானப் பணியில் தவறி விழுந்து வட மாநில வாலிபர் மரணம்!
திருச்செந்தூரில் கோயில் கட்டுமானப் பணியின் போது, தவறி விழுந்து வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப் பணியில் வட மாநிலத் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மேஜர் புத்தோர் மகன் அவிஜித் புத்தோர் (34) நேற்று மாலை கோயிலில் நிர்வாக அலுவலகத்தின் மேல் தளத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, நிலை தடுமாறி தவறி கீழே விழுந்ததில், அவருக்கு தலை, இடுப்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சக பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, திருக்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
