1 இல்ல... 2 இல்ல.. 2000 கி.மீ.. தனி ஆளா டிராவலிங்.. வியக்க வைக்க அதிசய பாம்பு!

 
பாம்பு

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் மனிதர்களாகிய நமக்குச் சலிப்பாக இருக்கிறது. ஆனால், ஒரு பாம்பு தனது சொந்த ஊரிலிருந்து சுமார் 2000 கி.மீ தாண்டி இந்தியாவுக்கு வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்ன? எங்கே? அது எப்பொழுது நிகழ்ந்தது? என்று பார்ப்போம்.

குஜராத் மாநிலம் சூரத்தில் 'கிழக்கு வெண்கல மர பாம்பு' என்ற அரிய வகை பாம்புகளை சமீபத்தில் பாம்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் உடல் செம்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக இது குளிர் பிரதேசங்களில் வாழ்கிறது. விஷமற்றது. இந்த வகை பாம்புகள் இந்தியாவில் அசாம் மற்றும் அண்டை நாடுகளில் வாழ்கின்றன.

அண்டை நாட்டைச் சேர்ந்த இந்த வகை பாம்புகள் சூரத்திலும், வீடுகளைச் சுற்றியுள்ள நிலப்பரப்பிலும் எப்படிக் காணப்படுகின்றன என்று பாம்பு ஆராய்ச்சியாளர்கள் குஜராத்தில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இறுதியாக இவர்களின் ஆய்வு முடிவுகளின் படி இந்த வகை பாம்புகள் அண்டை நாடுகளில் இருந்து சரக்கு அல்லது போக்குவரத்து மூலம் சூரத்திற்கு வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பாம்பு வகைகளை ஆய்வு செய்தபோது மொத்தம் 64 வகையான பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கல மர பாம்பு உட்பட 65 வகையான பாம்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web