ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' ... மோடி கூறும் எதுவுமே உண்மையில்ல... பிரியங்கா காந்தி ஆவேசம்!

 
மோடி பிரியங்கா காந்தி

 

 இந்தியா முழுவதும் 3 கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சார வியூகங்கள் வகுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வருவதை தடுக்கவும், அயோத்தியில் 'பாபர் பூட்டு' போடுவதை தடுக்கவும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் என பேசியிருந்தார்.  

பிரியங்கா காந்தி அதிரடி கைது! பரபரக்கும் தொடர் சம்பவங்கள்!

இந்நிலையில் பிரதமரின் பேச்சு முற்றிலும் பொய்யானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.  இது குறித்து  உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவோம் என்ற பிரதமர் மோடியின் கூற்று முற்றிலும் பொய். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என காங்கிரஸ் கட்சி பலமுறை கூறி வருகிறது. இதையே தான் காங்கிரஸ் கடந்த காலத்தில் கடைபிடித்துள்ளது.

பிரியங்கா காந்தி

 எதிர்காலத்திலும் இதையே செய்வோம்.  ராகுல் காந்தி தனது பேச்சின்போது தினந்தோறும் அம்பானி மற்றும் அதானி குறித்து பேசி வருகிறார். தற்போது அம்பானி-அதானி குறித்து பேச வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுவதற்கு முன்பு அதை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும்.  அதைச் செய்யாமல், தன் மனதிற்கு தோன்றியதை பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் கூறும் தகவல்கள் எதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை என்பது தான் முற்றிலும் உண்மை எனக் கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web