கடனை கட்டி முடிச்சும் நோட்டீஸ்... கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கூட்டுறவு சங்க அதிகாரிகள்!

 
 கோக்கலை

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை அடுத்த கோக்கலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், நடுத்தர கால கடன், மாற்றுத்திறனாளி கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை தவணை முறையில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வங்கியில் கடன் வாங்கிய பலருக்கு வாங்கிய கடனை செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை இயக்குனர் அருள்ராசு உத்தரவின் பேரில், திருச்செங்கோடு பண்டக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கிருஷ்ணன் தலைமையில், கூட்டுறவு துறை அதிகாரிகள் வங்கியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டுறவுச் சங்கத்தில் செயலராகப் பணியாற்றி வந்த ஏ.பெரியசாமி, எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோர், விவசாயிகள் மற்றும் பொதுப் பணத்துக்கு போலி பில் தயாரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

17 லட்சத்து 79 ஆயிரத்து 644 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சப்-ரிஜிஸ்டிரார் கிருஷ்ணன், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் ஏ.பெரியசாமி, எழுத்தர் சி.பெரியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web