எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புக்கான தேதிகள் அறிவிப்பு!

 
மழலையர் பள்ளிகள்

 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜுன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை விறுவிறுப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலைக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி  ஜூன் 11 முதல் ஜூன் 14ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும்

மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21 ம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ம் தேதி வரை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல்  என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!