நவம்பர் 13 மற்றும் 25ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை...!!

 
ரேஷன்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.  அதே போல் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5ம் தேதியும் விடுமுறையின்றி செயல்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 மற்றும் 25ம் தேதி விடுமுறை  நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரேஷன் விரல் பதிவு கைரேகை

இது  குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில்  அனைத்து நாட்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்   தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி,சர்க்கரை, பருப்பு என ரேஷன் கடையில் உள்ள பொருட்களை மானிய விலையில் வாங்க காத்திருப்பர்.

ரேஷன்

இதன் அடிப்படையில்  அனைத்து ரேஷன் கடைகளிலும்  இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.   பல ரேசன் கடைகள் முதல் 2 வாரம் வெள்ளிக்கிழமை தான்  விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை  திறந்து இருக்கும். பகுதி நேர கடைகள் மற்றும் சில கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அந்த  கடைகளும்  ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5ம் தேதி திறந்து  வைக்க வேண்டும்” என உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதே போல் நாளை வெள்ளிக்கிழமை நவம்பர் 10ம் தேதி சில கடைகள் மூடப்பட்டிருக்கும். அந்த ரேஷன் கடைகளும்  நாளை திறந்து வைக்கப்பட்டிருக்கும். தீபாவளிக்குள் மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என இந்த உத்தரவை உணவு வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web