நவம்பர் 16ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

 
விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் விழாக்கள் பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விடுமுறையை உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் வெளியிடுவார்.  இந்த உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தினங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. 

விடுமுறை


அந்த வகையில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பர் 16ம் தேதி   அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 மயிலாடுதுறையில்   நவம்பர் மாதத்தில் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது .  ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த துலா கட்ட தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவத்திற்காக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை


 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  விடுத்த செய்திக்குறிப்பில்  “ நவம்பர் 16ம் தேதி  கடைமுக தீர்த்தவாரி உற்சவ தினத்தில் மாவட்டத்தில் அதிக அளவிலான பக்தர்கள் ஒன்று கூடுவர்.   இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ம் தேதி  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  அன்றைய தினம்  அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் மற்றும் கருவூல பணிகளுக்கான ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.  இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 25ம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது  எனத்  தெரிவித்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web