தூத்துக்குடி : நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

முருகனின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் வெகு விமரிசையாக கந்த சஷ்டி திருவிழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்கள் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா தீபாவளிக்கு அடுத்து நவம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 18ம் தேதி நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 18ம் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.” இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!