சீருடை அணிந்தாலே மாணவர்களுக்கு இலவசம்!! அமைச்சர் அதிரடி உத்தரவு!!

 
சீருடை

தமிழகத்தில்  ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி தொடங்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், பை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து புத்தகங்கள் சீருடைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  

சீருடை

இந்நிலையில்  சீருடை அணிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். புதிய பஸ்பாஸ்  வழங்கப்படும் வரை ,  பழைய பஸ் பாஸை  பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் .

அரசு பேருந்து மாணவிகள்

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம்.சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டாலோ  கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web