இனி செய்திகளை படிக்க ட்விட்டரில் கட்டணம்! எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!

 
ட்விட்டர்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்குறைப்பு, நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே   ப்ளூ டிக் என அதகளப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது  ட்விட்டரில் செய்திகளை படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். ப்ளூ டிக் நடைமுறை போல் இதற்கும்  மாதாந்திர சந்தா திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  சந்தா செலுத்தாதவர்கள் தான் விரும்பும் ப்ரீமியம் செய்திக்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி படிக்கலாம். ஆனால், மாதாந்திர சந்தாவில் பதிவு செய்யாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


 சந்தா செலுத்துபவர்கள் ப்ளூ டிக் பெறுவதுடன், நீண்ட ட்வீட்களை பதிவிடவும், தேவைப்பட்டால் அதை எடிட்டிங் செய்யும் வசதியும் அவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பயனர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.2022அக்டோபரில் ட்விட்டரின் பொறுப்பை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார். அது முதல் எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார்.  இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் "அடுத்த மாதம் முதல்   ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்" எனக் கூறியுள்ளார்.


மேலும், "மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டியிருக்கும். சந்தா கட்டணம் செலுத்திய பின்னரே செய்திகளை  வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, ட்விட்டரில் அனைவரும் தங்கள் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார். 

"உலகெங்கிலும் அருகிலும் தொலைதூரங்களிலும் உள்ள படைப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்! பலருக்கு இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது இன்னும் அதிக அளவில் சிறந்த படைப்புகளை வழங்க உதவியாக இருக்கும்" எனவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் மாதாந்திர சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ட்விட்டரில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web