இனி தமிழகத்தில் கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

 
வண்டல் மண்


தமிழகத்தில் இனி இவர்கள் மட்டும் கட்டணமின்றி மண் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்  பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள் பராமரிக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து கட்டணமின்றி எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

மண் சரிவு
அதன்படி, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண் மற்றும் வண்டல் மண் இவைகளை  கட்டணமின்றி எடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கடந்த 2 ஆண்டுகளாக, நீர் ஆதாரங்கள் போதுமான அளவு நிரம்பியதால், விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு, நீர்நிலைகளில் சேமிப்பு அளவு குறைவாக  இருப்பதால் இப்போது தூர்வாரினால்  பருவமழைக் காலத்தில்  அதிக தண்ணீர் சேமிக்க முடியும்.

ஏரிகளில் மண்
இதன் அடிப்படையில்  இந்த மண் எடுப்பதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தாலுகாவில் அமைந்துள்ள எந்த நீர் ஆதாரத்திலிருந்தும் இந்த மண்ணை எடுக்கலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற பின்னரே இந்த மண்ணை எடுக்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு சற்று சிரமமான நிலை இருந்தது.
 புதிய விதிமுறைகளின்படி, விவசாயிகள் இப்போது வி.ஏ.ஓ.க்கு பதிலாக ஆன்லைன் போர்ட்டல் மூலம் தாசில்தாரிடம் அனுமதி பெறலாம்.  அதன்படி, இனி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பித்துவிட்டு உடனடியாக  இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web