சூப்பர்.. அவசரத்தேவைக்கான PF பணம் ரூ50000 லிருந்து ரூ1,00,000 ஆக எடுக்கலாம்!

 
பிஎப்

 பிஎப் திட்டம் என்பது நமது எதிர்கால சேமிப்பு மட்டுமல்ல. அவசர மற்றும் திடீர் தேவைகளுக்கும் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்கும்  வரப்பிரசாதம்.  அதே போல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு  அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது குறித்த லேட்டஸ்ட் பயனுள்ள தகவல் ஒன்று வெளியாகி பலரது வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  சில முக்கியமான  கோரிக்கைகளுக்கு தானியங்கி முறை தீர்வு முறையை தொடங்கியுள்ளது.  பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள்  இனி மருத்துவம்,  கல்வி, திருமணம், வீட்டு வசதிக்கான முன்பணம் தேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை.

பிஎப்
ஒரு லட்சம் வரையிலான முன் பணத்தை தானியங்கி செயல்முறை மூலமாக எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் 4 நாட்களில்  வங்கி கணக்கில் அட்வான்ஸ் பணம் வந்துவிடும் . இதற்கான விண்ணப்பங்கள் மனித தலையீடு இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவ அவசர நிலையான தானியங்கி பயன்முறையில் முன்கூட்டியே தீர்வு காணும் முறை 2020 வருடம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான உச்ச வரம்பு தற்போது ரூ50000லிருந்து ஒரு லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே கோரிக்கையை வைப்பதன் மூலம் 3 முதல் 4 நாட்களில் தீர்க்க முடியும். இதற்காக கணக்கு வைத்திருப்பவர்கள் உறுப்பினர் இ சேவா போர்டல் மூலமாக ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது. இத்தகவலால் பிஎப் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதற்கு பெரும்வரவேற்பு அளித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web