அணு ஆயுத உற்பத்தி மீண்டும் தொடங்கும்.. அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த புதின்!
நீண்ட தூர ஏவுகணைகளை ஜெர்மனியில் நிலைநிறுத்தினால் மாஸ்கோ இடைநிலை அணு ஆயுத உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.SM-6, Tomahawk கப்பல் ஏவுகணைகள் மற்றும் வளர்ச்சி ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உள்ளடக்கிய நீண்ட கால இராணுவமயமாக்கலின் ஒரு பகுதியாக 2026 முதல் ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தத் தொடங்கும் என்று அமெரிக்கா கூறியது. இதற்கு பதிலடியாக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஏகாதிபத்திய தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு ரஷ்யா, சீனா, அல்ஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளிடம் ஆற்றிய உரையின் போது, அமெரிக்காவின் நடவடிக்கை "பனிப்போர் பாணியிலான ஏவுகணை நெருக்கடியை" தூண்டும் அபாயம் இருப்பதாக புதின் கூறினார். "எதிர்காலத்தில் இதுபோன்ற அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் நமது பிராந்தியத்தில் உள்ள இலக்குகளை நோக்கி பறக்கும் என்று புதின் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
500 முதல் 5,500 கிமீ (310–3,420 மைல்கள்) வரை பயணிக்கக்கூடிய இத்தகைய ஏவுகணைகள் 1987 இல் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனால் கையொப்பமிடப்பட்ட இடைநிலை அணுகுண்டு படைகள் (INF) உடன்படிக்கைக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய இரண்டும் 2019 இல் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

அதாவது, 1987 அமெரிக்க-சோவியத் ஒப்பந்தத்தின் கீழ், நடுத்தர தூர இலக்குகளுக்கு எதிராக தரை அடிப்படையிலான ஆயுதங்களை நிலைநிறுத்துவது பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டது. ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா ஏவுகணை சோதனை நடத்துவதாக குற்றம்சாட்டி, 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இந்நிலையில் அந்த ஆயுதங்களை தயார் நிலையில் வைக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தயாராகி வருகின்றன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
