ரெமல் புயல்... கொந்தளிக்கும் கடல்... 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
ரெமல் புயல்
 தீவிரமடையும் ரெமல் புயல் காரணமாக வங்கக்கடல் சீற்றமடைந்து கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரெமல் புயலாக உருவாக உள்ளதையடுத்து சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரேமல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தென்படுவதாகவும், ரெமல் புயல் தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
இம்மாதம் 26ம் தேதி ரெமல் புயல் வங்கதேச கடற்கரையோரம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக அலைகள்  சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மீனவர்களை எச்சரிக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிக்கும் விதமாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!