நெகிழ்ச்சி... குழந்தைக்கு தடுப்பூசி போட சீறிப் பாய்ந்த ஓடையைக் கடக்கும் நர்ஸ்... திகைப்பூட்டும் வீடியோ!

 
நர்ஸ்
 

இமாச்சலப் பிரதேசத்தில்  நர்ஸ் ஒருவர் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான, நிரம்பி வழியும் ஓடையைக் கடந்துள்ளார். இச்சம்பவம்  மண்டி மாவட்டத்தின் சௌஹர்காட்டியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.   


திக்கர் கிராமத்தில் வசிக்கும் கமலா தேவி என்ற நர்ஸ் பெண், நீரில் மூழ்கிய பாறைகளில் சமநிலைப்படுத்திக் கொண்டு, சீறி பாயும் ஓடையை கடக்கிறார். தண்ணீரின் சீற்றம் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில், அவள் ஒரு பாறையில் காத்திருந்து, பின்னர் கொந்தளிப்பான நீரைக் கடந்து செல்ல சரியான நேரத்தில் மற்றொரு பாறைக்குத் தாவுவதைக் காணலாம். கடுமையான ஆபத்து இருந்தபோதிலும், கமலா தேவி ஓடையைக் கடந்து, 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக  தனது சுகாதார மையத்திற்கு சென்றதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக உயிரைப் பணயம் வைத்து, வெள்ளம் பாய்ந்து ஓடும் ஓடையைக் கடந்த செவிலியர்

இந்த வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரது துணிச்சலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.   பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் இந்த வீடியோவைப் பார்த்து, "கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக" என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர்  "மாநிலத்தின் உட்புறங்களைச் சென்றடைய சிறந்த சாலைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் ஒவ்வொரு சவாலையும் மீறி கமலா தேவி செய்வது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது! குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அவர் முன்னுரிமை அளித்த விதமும், இமாச்சலப் பிரதேசத்தில் சாலைத் தடைகள் அவரது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க விடாததும் பாராட்டத்தக்கது!" என பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?