பகீர்... நோயாளிகளின் உடலில் காற்றை செலுத்திய கொடூரம்... 17 பேஷண்ட்டைக் கொன்ற நர்ஸ்!

 
ஹீதர் பிரஸ்டீ

அடுத்தடுத்து 17 நோயாளிகளை அளவுக்கு அதிகமான இன்சுலின் செலுத்தியும், ஊசி மூலமாக காற்றை செலுத்தியும் கொலை செய்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். இந்த கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அமெரிக்க செவிலியருக்கு 760 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023 வரை 5 சுகாதார நிலையங்களில் பணியாற்றி 17 நோயாளிகளின் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் செவிலியராகப் பணிபுரிந்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ (Heather Pressdee), மூன்று கொலைக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் 19 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், அவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் பணிபுரியும் போது இந்த கொடூரத்தை செய்துள்ளார்.

22 நோயாளிகளுக்கு அதிக அளவு இன்சுலின் வழங்கப்பட்டது. பெரும்பாலான நோயாளிகள் அடுத்த சில மணிநேரங்களில் இறந்தனர். சிலர் தாமதமாக இறந்துள்ளனர். இன்சுலின் அளவு அதிகரிப்பது இரத்தச் சர்க்கரைக் குறைவு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும். கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகள் இறந்தது தொடர்பாக அவர் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.

பெண் நோயாளி

ஆனால் போலீசார் நடத்திய விரிவான விசாரணையில் அவரது சந்தேகத்துக்குரிய பின்னணி தெரிய வந்தது. ஒரு செவிலியராக இருந்த அவரது செயல்கள் குறித்து சக ஊழியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தவிர நோயாளிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டியும் வந்துள்ளார். ஹீதர் பிரஸ்டீயைப் போலவே, சார்லஸ் கல்லன் என்ற செவிலியர் நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவில் 29 நோயாளிகளை இன்சுலின் மூலம் கொன்றார். மேலும் வில்லியம் டேவிஸ் என்ற செவிலியர் இதய நோயாளிகளுக்கு காற்றை ஊசியில் செலுத்தி 4 நோயாளிகளின் உயிரை பறித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web