நர்சிங் ரோபோ... பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

 
நர்சிங் ரோபோ

 
2020ம் ஆண்டு உலகம் முழுவதும்  கொரோனா என்ற நோய் தொற்று பரவி பெரும் பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தியது.   கேரளாவில் தொடங்கி படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மழை காலம், வெயில் காலம் என்று எந்த காலமானாலும் ஏதாவது ஒரு நோய் தொற்று பரவ தான் செய்கிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நர்சிங் ரோபோ
 இந்த தொற்றுகள் பரவுவதற்கு முக்கிய காரணம்  நோயாளிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு நேரடியாக தொடர்பு இருப்பது தான்.  இந்நிலையில் கேரளா கோழிக்கோடு பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் ஆதிதேவ் என்ற மாணவர் ஒருவர் நர்சிங் ரோபோ ஒன்றை தயாரித்துள்ளார். அவர் நோய் தொற்றின் பாதிப்பின் போது சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க  நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நர்சிங் ரோபோ
இதனால் நோயாளிகளுக்கு, மருத்துவர்கள்  மற்றும் நர்சுகள் நேரடியாக மருந்துவர்கள் வழங்குவது தவிர்க்கப்படுகிறது. இதில் வீடியோ அழைப்பு வசதியும் இருக்கிறது. இதனை ரிமோட் மூலமாகவும் இயக்க முடியும். இந்த ரோபோ பல்வேறு பரப்புகளில் நகர்ந்து செல்லவும் முடியும். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் நர்சுகள் 100 மீட்டர் தொலைவில் இருந்து ரோபோவை இயக்கி நோயாளிகளை கண்காணித்து மருந்து வழங்க முடிகிறது. இந்த ரோபோ இரவிலும் செயல்படும் வகையில் எல்இடி விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web